இயக்குநர் விக்னேஷ் சிவனைக் கதாநாயகனாக்க பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இதைப் பற்றி வாய் திறக்க வில்லை. சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவ தாகக் கூறப்பட்டது. ஆனால், திடீரென அந்தப் படத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டு அவ ருக்குப் பதிலாக இயக்குநர் எம்.ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நயன்தாரா , "இனி விக்னேஷ் சிவனுக்கு யாரும் வாய்ப்புத் தர வேண்டாம். சொந்தமாக நானே படம் தயாரிக்கிறேன். அந்தப் படங்களை அவர் இயக்கினால் போதும்," என்ற முடிவுக்கு வந்துவிட்டார். மேலும் அவரை ஒரு கதாநாயகனாக மாற்றவும் நயன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநரை நாயகனாக்க விரும்பும் நயன்தாரா
1 mins read
-

