சினேகா: அனுபவம் தந்த முன்னெச்சரிக்கை

சினேகா: அனுபவம் தந்த முன்னெச்சரிக்கை

1 mins read
7ffb5576-e983-480a-9a54-edb73b032239
-

ஜோதிகா, சமந்தா போன்றவர் கள் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடித்து வருவதால் சினேகாவும் தனது நடிப்பை முழு நேரமாகத் தொடர முடிவு செய்து இருக்கிறார். அதற்காக உடலைக் கச்சித மாக வைத்துக்கொள்ளும் முயற்சி யில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்காக உடற்பயிற்சி கூடம் ஒன்றில் சேர்ந்திருக்கும் அவர் தினமும் கடும் பயிற்சிகள் மேற் கொண்டு ஒல்லியான தோற்றத் துக்கு மாறி வருகிறார்.

உடற்பயிற்சி செய்யும் காணொ ளியையும் அவர் இணையத்தளத் தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால், வழக்கமான பாத்திர மாக இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தும் விதமான கதா பாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் சினேகா. இப்போதெல்லாம் தன்னிடம் கதை கூற வரும் இயக்குநர்களி டம் தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் படத்தில் அது இடம் பெறும் நேரம் குறித்தும் முன்னரே கேட்டறிகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் வெளியான 'வேலைக்காரன்' படம் கொடுத்த அனுபவம் தான் சினேகா இப்படி மாற்றியுள்ளது. அவர் நடித்த பல காட்சிகள் அப்படத்தில் நீக்கப் பட்டுவிட்ட தால் தற்போது இயக்குநர்களிடம் துருவித் துருவிக் கதை கேட்கிறா ராம் சினேகா.