அனிரூத்தின் வித்தியாசமான புகைப்பட ஆசை

அனிரூத்தின் வித்தியாசமான புகைப்பட ஆசை

1 mins read
77de3096-8c85-4927-99ca-e0ff98b1f578
-

முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது பெண்ணாக வேடம் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகர்கள், நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது புதிதாக 'போட்டோ ‌ஷூட்' நடத்து வது வழக்கம். அந்தப் புகைப்படங்களை அவர் கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். அந்த வரிசை யில் தற்போது அனிருத்தும் இணைந்திருக்கிறார். அண்மையில் நடந்த அவரது 'போட்டோ ‌ஷூட்' ஒன்றின் புகைப்படங்கள் வெளியாகி உள் ளன.

அதில் அவர் பெண் வேடம் அணிந்து எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், "யார் இந்தப் பெண், புதுமுக நடிகையா, என்று அனைவரும் சிந்திக்கும் நிலையில், அனிருத் தான் என்று ஒரு சிலர் கூறிய தால்தான் கண்டுபிடிக்க முடிந்து இருக்கிறது. தற்போது இந்தப் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.