நான் எவ்விதத்தில் குறைந்து போய் விட்டேன்? எனக்கு என்ன அழகில் லையா? இளமையில்லையா? என்று கேள்வி கேட்டுள்ள நித்யா மேனன், "நான் கோணி மூட்டை அல்ல, அழகான சீமாட்டி என்பதை விரைவில் மெய்ப்பிக் கிறேன்," என்றும் சவால் விட்டுள்ளார். நித்யா மேனனிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே தங் களது படத்தில் இரண்டாவது நாயகி, மூன்றாவது நாயகி பாத்திரத்தில்தான் நடிக்கவேண்டும் என்று கூறுகிறார்களாம். இதைக்கேட்டு வேதனை அடைந்துள்ள நித்யா மேனன், "எனக்கென்ன குறைச் சல்? என்கிட்டே அழகில்லையா? இளமை இல்லையா? பலரையும் சுண்டி இழுக்கும் வசீகரம்தான் இல்லையா? நான் ஏன் படத்தின் நாயகியாக நடிக்கக்கூடாது என்று தமிழில் தனக்கு நெருக்கமான நடிகரிடம் நித்யா புலம்பி இருக்கிறாராம்.
"அதெல்லாம் சரி. ஆனால் கோணி மூட்டை மாதிரி ஒரு வடிவமே இல்லாமல் இருக்கும் உடம்பை முதலில் குறைக்கும் வழியைப் பாரு. இல்லை என்றால் அண்ணி, அம்மா பாத்திரத்துக்குக் கூட கூப்பிடுவார்கள்," என்று அந்த நாயகனும் பதிலுக்குக் கலாய்த்திருக்கிறார். அண்மையில் உடல் எடையைக் குறைத்து ஆச்சரியப்படுத்திய பிரம்மாண்ட நடிகை ஒருவரிடம் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி விவரங்களை விசாரித்துள்ள நித்யா, பயிற்சிகளை மேற்கொண்டு இந்த கோடம்பாக்கத்தையே ஒரு கலக்கு கலக்கு கிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

