ராய் லட்சுமி: என் பயணத்தில் குழப்பமில்லை

ராய் லட்சுமி: என் பயணத்தில் குழப்பமில்லை

2 mins read
cf7bc39c-f64e-4214-9a2c-e9d3f213e59e
-

இந்திப் பட உலகில் நல்ல அறிமுகம் கிடைத்தி ருப்பதாகச் சொல்கிறார் நடிகை ராய் லட்சுமி. இந்தியில் வெளியான 'ஜூலி-2' படத்தில் தன் எதிர்பார்ப்புக்கு ஏற்ற கதாபாத்திரம் அமைந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளா ராம். "நான் எதிர்பார்த்த நல்ல கதை கிடைத்தது. எனவேதான் 'ஜூலி-2' படத்தில் தயக்கம் இன்றி நடித்தேன். எனினும் எதிர்பார்த்த அளவு அந்தப் படம் ஓடவில்லை என்பது உண்மைதான். அதற்காக நான் கவலைப்படவில்லை," என்கி றார் ராய் லட்சுமி.

'ஜூலி-2' மூலம் இந்திப் படங்களில் நடிப்பதற்கான கதவுகள் இப்போது திறந்து இருப்பதாகச் சொல்பவர், தேடி வரும் வாய்ப்புகள் மூலம் தன்னை பாலிவுட்டில் தக்க வைத்துக் கொள்வதில் முனைப்பாக உள்ளாராம். "பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படத்தில் அறிமுகமாகி, பிரபலமாக வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் ஆசைப்பட்டேன்.

என் ஐம்பதாவது படத்தில் நாயகியை மையமாக வைத்து ஒரு கதையில் நடிக்க விரும்பினேன். 'ஜூலி-2' அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைத்துள்ளது. "இதேபோல் தரமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். எனது திரைப்பயணத் திட்டத்தில் எந்தவிதமான குழப்பமும் இல்லை," என்று சொல்லும் ராய் லட்சுமிக்கு அவரது சகோதரி தான் பக்கபலமாம். குழந்தைப் பருவம் முதற்கொண்டே சகோ தரியின் பாச அரவணைப்பில் இருப்பதாகச் சொல்கிறார்.

"நான் தனி ஆள் இல்லை. எனக்கு எப் போதும் ஆதரவாக இருப்பவர் என் சகோதரிதான். எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். "சினிமா துறைக்கு நான் வந்தபிறகு எனக்கு முதுகெலும்பு போல ஆகி விட்டார். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் கவலைப்படமாட் டேன்.

"ஏனெனில் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அவரிடம் விஷயத்தைச் சொன்னால் அதன் பிறகு அனைத்தையும் என் சகோதரி பார்த்துக்கொள்வார்," என்று சொல்லும் ராய் லட்சுமி திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனவே இனி பணத்துக் காக என்றில்லாமல் நல்ல நடிகை எனப் பெயரெடுக் கும் நோக்கத்துடன் மட் டுமே நடிக்கப்போவதாகச் சொல்கிறார்.