'மன்னார் வளைகுடா', 'இன்னுமா நம்மள நம்புறாங்க', 'கண்டேன் காதல் கொண்டேன்' போன்ற படங் களுக்கு வசனம் எழுதிய கே.எஸ். பழனி இயக்குநராகப் புது அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் பெயர் 'காசு மேலே காசு'. நாயகன் ஷாருக், காயத்ரி நாயகி. இன்னொரு நாயகனாக மயில்சாமி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, 'லொள்ளுசபா' சாமிநாதன் ஆகியோரும் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளதாம். இதில் தன் பங்குக்கு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளாராம் மயில்சாமி. "மயில்சாமியின் நகைச்சுவை குறித்து நான் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவருடைய பங்களிப்பு அதிகம். ஓர் இயக்குநருக்கான பொறுப்போடு இந்தக் கதையை உள்வாங்கி நடித்துக் கொடுத்தார். "கடுமையான கால்ஷீட் நெருக் கடிக்கு மத்தியிலும் எங்களுக்கு அதிக நாட்களை ஒதுக்கிக் கொடுத் தார். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் ஒட்டுமொத்த படக்குழுவும் கலகலப்பாக இருக்கும். "மொத்தத்தில் நகைச்சுவையில் தெறிக்க விட்டிருக்கிறார். அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இப் படம் விரைவில் வெளியாகும்," என்று மயில்சாமியின் புகழ் பாடுகிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி.

