ஜீவா, ஷாலினி பாண்டே ஜோடி சேர்ந்துள்ள படம் 'கொரில்லா'. டான் சாண்டி இயக்குகிறார். இது முழுநீள நகைச்சுவையுடன் கூடிய திகில் படமாம். "இயக்குநர் டான் சாண்டி இப்படத்தின் கதையைச் சொன்னபோது பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன். சில இடங்களில் திகிலாக உணர்ந்தேன். எனவே, ஒரே சமயத்தில் நகைச்சுவையையும் திகில் உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய நாயகன், நாயகி தேவைப்பட்டனர். என்னுடைய முதல் தேர்வாக இருந்தது ஜீவாதான். நாயகி ஷாலினி உட்பட அனைவருமே தங்களது பங்களிப்பைக் கச்சிதமாகச் செய்துள்ளனர். இந்தப் படம் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும்," என நம்பிக்கையுடன் சொல்கிறார் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா.
நகைச்சுவையும் திகிலும் கலந்து உருவாகிறது 'கொரில்லா'
1 mins read
-

