சங்கவி: கவர்ச்சிக்காக நடிக்க வைத்தனர்

சங்கவி: கவர்ச்சிக்காக நடிக்க வைத்தனர்

2 mins read
c5bff48e-55be-4e76-a859-88f7913e594e
-

நடிகர் அஜித்தை சந்தித்துப் பல ஆண்டுகளாகிவிட்டது என்று நடிகை சங்கவி தெரிவித்துள்ளார். அஜித், விஜய்யுடன் நடித்து பிரபலமான இவர், இடையில் சில காலம் நடிக்காமல் இருந்தார். அஜித்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்த 'அமரா வதி'தான் சங்கவிக்கும் முதல் படம். பிறகு விஜய்யுடன் 'ரசி கன்', 'விஷ்ணு', 'கோயமுத்தூர் மாப்ளே' உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணிக்கு வந்தார். மார்க்கெட் மதிப்பு குறைந்த பிறகு ரஜினியுடன் 'பாபா', கம லுடன் 'பஞ்சதந்திரம்' உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்க ளில் சங்கவியைக் காண முடிந் தது. தற்போது சமுத்திரக்கனி ஜோடியாக நடிக்கும் 'கொளஞ்சி' மூலம் நாயகி வேடத்தில் மறு பிரவேசம் செய்துள்ளார்.

இந்நிலையில், கவர்ச்சிக்கா கவே தன்னை பல படங்களில் ஒப்பந்தம் செய்ததாக பேட்டி ஒன் றில் தெரிவித்துள்ளார் சங்கவி. "அமராவதி'க்குப் பிறகு 'ரசிகன்' பட வாய்ப்பு கிடைத்தது. விஜய் நாயகனாக நடிக்க அவரது தந்தை ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக் கிய படம் அது. 'அமராவதி'யைப் பார்த்துவிட்டு என்னை இந்தப் படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர். "உண்மையில் அவருக்கு என் நடிப்பு தொடர்பாக சற்றே தயக்கம் இருந்தது. ஆனால் அந்தப் படம் பெரியளவில் வெற்றி கண்டது," என்கிறார் சங்கவி.

பிறகென்ன, கவர்ச்சி நாயகி என்றாலே அது சங்கவி என்று நிலைமை மாறிப்போனதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் பிறகு விஜய்யுடன் மேலும் சில படங்களில் ஜோடி சேரும் வாய்ப்பு தன்னால் தேடி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சங்கவி, சமுத்திரக்கனி