ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. மாகி ராகவ் இயக்கும் இப்படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். இது இருபது ஆண்டுகள் கழித்து மம்முட்டி நடிக்கும் தெலுங்குப் படம். இந்நிலையில் ராஜசேகர ரெட்டியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டு கீர்த்தி சுரேஷை அணுகி உள்ளதாம் இப்படக்குழு. தற்போது நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. இதையடுத்து தேடி வந்துள்ள புதிய வாய்ப்பையும் அவர் ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தியைத் தேடி வந்த மருமகள் வேடம்
1 mins read
-

