அரசியல் ஆசையை நிறைவேற்ற பாடுபடும் கதாநாயகன்

அரசியல் ஆசையை நிறைவேற்ற பாடுபடும் கதாநாயகன்

1 mins read
836f8e28-b18b-4c37-8179-226c82b16a2e
-

அறிமுக இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டியின் இயக்கத்தில் முழு நீள நகைச்சுவை சரவெடியாக உரு வாகியுள்ளது 'பதுங்கி பாயணும் தல'. அண்மையில் இதன் பாடல் வெளியீட்டு விழாவைத் தடபுடலாக நடத்திய மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குநர். நகைச்சுவைதான் இப்படத்தின் அடிநாதமாம். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்று படம் முழுவதும் கலகலப்பான காட்சி களுக்குப் பஞ்சமிருக்காதாம். வேல. ராமமூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

"பெற்றோரை இழந்த நாயகனை வளர்த்து ஆளாக்குகிறார் வேல.ராம மூர்த்தி. அதற்குப் பிரதிபலனாக, தனக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்த அவரது அரசியல் ஆசையை நிறைவேற்ற நண்பர்களுடன் சேர்ந்து முயற்சி செய்கிறார் நாயகன். "அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை மிக நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறோம்." 'பதுங்கி பாயணும் தல' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.