ரா‌ஷி: வதந்தியை யாரும் நம்பவேண்டாம்

ரா‌ஷி: வதந்தியை யாரும் நம்பவேண்டாம்

1 mins read
5dd73d45-c9d8-442c-a08a-ebc8f2fe01d8
-

பிரபல கிரிக்கெட் வீரரைக் காதலிப்பதாக தன்னைப் பற்றி வெளியான தகவலை இளம் நாயகி ரா‌ஷி கண்ணா மறுத்துள்ளார். இது வெறும் வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இமைக்கா நொடிகள்' மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகிறார் ரா‌ஷி. முதல் படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பும்ராவை இவர் காதலிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

இருவரும் ரகசியமாகச் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஆனால் ரா‌ஷி இதுகுறித்து முதலில் வாய் திறக்கவில்லை. ஆனால் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவலைக் கண்டதும் பதறிவிட்டார். "பும்ராவும் நானும் காதலிப்பதாக ஆதாரமில்லாமல் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம்," எனத் தற்போது விளக்கம் அளித்துள்ளார் ரா‌ஷி.

ரா‌ஷி கண்ணா