'ஆண் தேவதை'

'ஆண் தேவதை'

1 mins read
20a67b44-66df-4ad8-9535-c069202ee989
-

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள படம் 'ஆண் தேவதை'. மேலும் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்றைய சமூகத்துக்குச் சொல்லவேண்டிய மிக முக்கிய கருத்தை அலசுகிறதாம் இப்படம். அண்மையில் இதன் முன்னோட்டம் வெளி யானது. நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டனர். ஆயிரக்கணக்கானோர் இம்முன்னோட்டத்தை இணையத்தில் கண்டு ரசித்துள்ளனர்.