பாண்டியராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. இதில் விவசாயி வேடத்தில் நடிப்பதாகத் தகவல். இதையடுத்து விவசாய முறைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட் டும் கார்த்தி, சில விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது வாழ்க்கை அனுபவங்களை விசாரித்து அறிவதுடன், விவசாயம் செய்வதற்கான நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு, நேரடிப் பயிற்சியும் பெற்று வருகிறாராம். இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக சாயிஷாவும் அவரது தந்தையாக சத்யராஜும் நடிக் கின்றனர். டி.இமான் இசையமைக்க, மற்றொரு நாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
புதுப் படத்துக்காக விவசாய நுணுக்கங்களைக் கற்கும் கார்த்தி
1 mins read
-

