'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றி பெறாவிட்டாலும் அதில் பங்கேற்ற வகையில் பலரும் ஆதாயம் அடைந்துள்ளனர். அவர்களில் ஹரிஷ் கல்யாண், ரைசா கூடுதல் அதிர்ஷ்டம் உள்ளவர்கள். அந்நிகழ்ச்சி முடிந்தவுடனேயே சூட்டோடு சூடாக இருவரும் ஒரு திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகினர். 'பியார் பிரேமா காதல்' என்ற அப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இளையர்களைக் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறாராம் இயக்குநர் இலன்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் பிற மொழி உரிமையை வாங்குவதில் பெரும் போட்டி நிலவுவதாகத் தகவல். குறிப்பாக இதன் இந்தி உரிமையைப் பெறுவதற்கு பல வட இந்திய நிறுவனங்கள் களமிறங்கி உள்ளனவாம்.
"காதலுக்கு மொழி அவசியம் இல்லை. காதலைப் பற்றிய படங் களுக்கும் மொழி அவசியமில்லை. அதனால்தான் படத்துக்கு தொடக் கம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது," என்கிறார் இலன். இதற்கிடையே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற சினே கனும் ஓவியாவும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப் படத்துக்கு 'பனங்காட்டு நரி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹரிஷ், ரைசா.

