நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பு என இந்தி நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியுடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது தமது அதிர்ஷ்டம் என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "ஸ்ரீதேவி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் நடித்த 'சாந்தினி', 'லம்ஹே' படங்களைப் பார்த்து வளர்ந்தேன்.
என் மகள் ஆதிரா பிறந்தபிறகு நானும் ஸ்ரீதேவியும் நெருங்கிய தோழிகளாகி விட்டோம். தாய்மை குறித்து எனக்கு அவர் பல ஆலோசனைகளைச் சொல்லி இருக்கிறார்," என்று ராணி முகர்ஜி கூறியுள்ளார். தம் வாழ்நாளில் முக்கியமான இருவரை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமது தந்தையும் ஸ்ரீதேவியும்தான் அந்த இருவர் எனத் தெரிவித்துள்ளார். "நான் நடித்த 'ஹிச்கி' படத்தை பார்க்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் பார்க்காமலேயே காலமாகிவிட்டார்," என்கிறார் ராணி.

