'நரகாசூரன்' படத்துக்கு முளைத்த புதுச்சிக்கல்

'நரகாசூரன்' படத்துக்கு முளைத்த புதுச்சிக்கல்

1 mins read
029cc99e-afd8-4ef3-b60b-c052b2bb6625
-

இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'நரகாசூரன்' திரைப்படம் குறித்த நேரத்தில் சிக்கலின்றி வெளியாகுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் நரேன் ஒரு தகவலைப் பதிவிட்டார். "சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்று விடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்," என நரேன் பதிவிட்டதன் மூலம் அவருக்கும் கௌதமுக்கும் இடையே மோதல் நிலவுவது தெரிய வந்துள்ளது. இதற்கு கௌதம் பதிலளித்துள்ளார். "சில இளம் இயக்குநர்கள் படத்தை உருவாக்கிவிட்டு அதைப் பற்றி புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள்," என்று கௌதம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்தும் கார்த்திக் நரேன் அவரை விடுவதாக இல்லை. மேலும் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். "பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் நீங்கள் எங்களைக் குப்பை போல நடத்தி னீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்யவேண்டியதாகி விட்டது. தயவுசெய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர் கள்," என்று கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

'நரகாசூரன்' படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா.