சிவாவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி

சிவாவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி

1 mins read
f2f0cc4d-0778-4233-b9df-52db586610d6
-

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கக் கேட்டு படக்குழுவினர் சாய் பல்லவியை அணுகி உள்ளதாகத் தகவல். தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' படத்தில் நடித்து முடித்துள்ளார் சாய் பல்லவி. தமிழில் அடுத்து செல்வராகவன் இயக்கும் 'என்.பி.கே.' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகி உள்ளார். இந்நிலையில் சிவகார்த்தி கேயனை வைத்து எம்.ராஜேஷ் இயக்கும் புதுப் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் சாய் பல்லவி நாயகியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும் என ராஜேஷ் கருத, சிவாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். இதையடுத்து கால்‌ஷீட், சம்பளம் குறித்து சாய் பல்லவியுடன் இப்படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.