தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிய பூரிப்பில் இருக்கிறார் ரகுல் பிரீத் சிங். வேறொன்றுமில்லை... ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் அந்தக் கனவாம். தமிழிலும் தெலுங்கிலும் முன்னிலை நடிகையாக வலம் வருகிறார் ரகுல். தற்போது சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயனுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் புதுப் படம் ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அம்மணி. இப்படத்துக்கு ரகுமான் இசையமைக்கிறார். "ரகுமான் சார் இசையை எப்போதும் ரசித்துக் கேட்பேன். அவர் இசையமைக்கிறார் என்றால் எந்தப் படத்திலும் நடிக்க நான் தயார். "சிவாவுடன் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ஆவலுடன் காத்துக்கிடக்கிறேன். ரகுமான் இசையில் வெளியாகும் பாடல்களை எப்போது கேட்போம் என்ற ஆவலும் அதிகரித்தபடி உள்ளது," என்கிறார் ரகுல் பிரீத்.
காத்துக்கிடப்பதாகச் சொல்லும் ரகுல்
1 mins read
-

