ஆர்யாவின் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு

1 mins read
00267708-1952-4a9e-8539-7f901dafa449
-

நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக தொலைக்காட்சி மூலம் மணப்பெண்ணைத் தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களிடம் இருந்து ஆர்யாவை மணக்க விண்ணப்பங்கள் வந்தன. அவர்களில் 16 பேரைத் தேர்வு செய்து பழகி ஒருவரை மணப்பெண்ணாகத் தேர்வு செய்ய இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாக பெ ண் க ள் அ மை ப் பி ன ர் கண்டித்துள்ளனர்.

இதற்குத் தடை கோரி நீதிமன்றத் திலும் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நடிகர் ஆர்யா இலங்கை சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் மணப்பெண் தேர்வுக்காக நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆர்யா வந்துள்ள தகவல் அறிந்ததும் நூலகத்தில் ரசிகர்கள் கூடினார்கள். ஆர்யாவிடம் 'ஃசெல்பி' எடுக்கவும் கையெழுத்து வாங்கவும் முண்டியடித்தனர். இதற்கிடையில் நூலகத்தில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.