மூன்று வேடங்களில் அதர்வா

மூன்று வேடங்களில் அதர்வா

1 mins read
7940f2f9-ddc1-4cd1-a4a2-d2fe30e604be
-

நடிகர் அதர்வா, 'பூமராங்' படத்தில் மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களை அசத்த இருக்கிறார். மேகா ஆகாஷ், உபன் பட்டேல், இந்துஜா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் அதர்வா மூன்று வேடங்களில் நடிப்பதால் ஒவ்வொரு வேடத்திற்கும் வித்தியாசம் தெரியவேண்டும் என்பதற்காகப் பல மணி நேரங்கள் செலவிட்டு ஒப்பனை செய்து நடிக்கிறார். 'பத்மாவத்', 'மாம்', '102 நாட் அவுட்' உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்ப னைக் கலைஞர்கள் நடிகர் அதர்வாவுக்கு ஒப்பனை செய் கிறார்கள். 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் சார்பில் 'பூமராங்' படத்தை கண்ணனே இயக்கி தயாரிக் கிறார். இது ஒரு சண்டை கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது. மேலும் படத்தில், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.