சரித்திரப் படத்தில் நடிக்கும் நயன்தாரா

சரித்திரப் படத்தில் நடிக்கும் நயன்தாரா

1 mins read
fec5365c-9fdc-49e0-b5f6-79fd7a4449b3
-

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைகளில் தனக்கென தனி இடத் துடன் பவனி வருபவர் நயன்தாரா. இவர் சிரஞ்சீவி யுடன் வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். நயன்தாரா தமிழில் நடித்துக் கடைசியாக வெளிவந்த 'அறம்' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தெலுங்கு மறுபதிப்பான 'கர்த்தவ்யம்' படம் கடந்த வாரம் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா' படம் கோலிவுட் வேலை நிறுத்தம் முடிந்ததும் வெளியாக உள்ளது. அதற்கடுத்து 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாகலாம்.

தமிழில் அஜித்துடன் 'விசுவா சம்' படத்தில் மட்டுமே நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். 'கோலிவுட்' வேலை நிறுத்தத்தால் 'விசுவாசம்' படத் தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கிறது. அதனால் அந்தப் படத்திற்காக கொடுத் திருந்த நாட்களைத் தெலுங்கில் நயன்தாரா தான் நடிக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்திற்குக் கொடுத்து இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாரா முதல் முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார். சிரஞ்சீவியின் 151வது படமாக 'சைரா நரசிம்ம ரெட்டி' படம் உருவாகி வருகிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கிவரும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு எனப் பிரமிக்க வைக்கும் நட்சத்திர கூட்டணி கைகோத்துள்ளது.