ஒரே பெண்ணைக் காதலிக்கும் மூன்று இளையர்களின் கதை

ஒரே பெண்ணைக் காதலிக்கும் மூன்று இளையர்களின் கதை

1 mins read
776166a7-0aa6-4b1e-b2c8-bdb8a6a826f4
-

மணிரத்னம் இயக்கிய 'தளபதி'யில் இடம்பெறும் வசனம் 'நட்புனா என்னானு தெரியுமா'. இதையே ஒரு படத்தின் தலைப்பாக்கி விட்டனர். தொலைக்காட்சிப் புகழ் கவின், நடிகை ரம்யா நம்பீசன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தில் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மூன்று இளையர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள். மூவரில் யாருடைய காதல் கைகூடுகிறது என்பதே கதை. இளையர்களைக் கவரும் வகையில் இப்படம் உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் சிவா. 2016ல் தொடங்கிய இப்படம் இப்போது வெளியீடு காணத் தயாராக உள்ளது. எனினும் தமிழ்த் திரையுலகில் நடந்து வரும் போராட்டம் காரணமாக வெளியீடு தள்ளிப்போகும் எனக் கூறப்படுகிறது.