தனுஷுடன் நடிக்க வேண்டும் எனும் கனவு 'வடசென்னை' மூலம் நிறைவேறி இருப்பதாக பூரிப்புடன் சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ் தயாரிப்பில் 'காக்கா முட்டை'யில் நடித்த போதே அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்பினாராம். ஆனால் அந்த விருப்பம் உடனடியாக நிறைவேறவில்லை என்கிறார். "இவ்வளவு பெரிய ஆசையை மனதில் வைத்திருந்ததாலோ என்னவோ, அந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. "நான் நடிக்கும் வேடத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தது. "அதன்பிறகு சமந்தா நடிப்ப தாக இருந்தார். இப்போதோ நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு வழியாக இந்தக் கதாபாத்திரம் என்னைத் தேடி வந்திருக்கிறது. "தனுஷ், வெற்றிமாறன் என்ற இரண்டு பெரிய ஜாம்பவான்களின் படங்களில் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது," என்று முகம் நிறைந்த புன்னகையுடன் சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா: கனவு நிறைவேறியது
1 mins read
-

