கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் 'மெர்குரி'. அண்மையில் வெளியான இதன் குறு முன்னோட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக், ரம்யா நம்பீசன், இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் வசனங்களே கிடையாது என்பதுதான் சிறப்பம்சம். இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் திகில் காட்சிகள் தான் அதிகமாம். பின்னணி இசையால் மிரட்ட உள்ளனர்.
இப்படம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வருகிற 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதால் 'மெர்குரி'யின் வெளியீடு தள்ளிப்போகும் எனத் தெரி கிறது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சலிஸில் வருகிற 12ஆம் தேதி அனைத்துலகத் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் 'மெர்குரி' திரைப்படம் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படுகிறது.

