'நரகாசூரன்' பட விவகாரம் இப்போதைக்கு முடிவுக்கு வருவ தாகத் தெரியவில்லை. படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். 'நரகாசூரன்' தயாரிப்பாளர் கவுதம் மேனன் தன்னை குப்பை போல நடத்தினார் என்பது கார்த்திக் நரேனின் முதல் குற்றச் சாட்டு. இந்தப் படத்துக்காக வெளியே வாங்கிய தொகையை தமது பொறுப்பில் உள்ள வேறு சில படங்களுக்கு கவுதம் பயன் படுத்தினார் என்பது கார்த்திக் நரேனின் இரண்டாவது குற்றச் சாட்டு. இவற்றை உடனுக்குடன் மறுத்த கவுதம், 'நரகாசூரன்' படத்தில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் சிலரது தேவையற்ற பேச்சுகளைக் கேட்டு கார்த்திக் நரேனுக்கு தன் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
'நரகாசூரன்' படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா.

