மித்ரன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் 'இரும்புத்திரை'. சமந்தா அவரது ஜோடியாக நடித்துள்ளார். யுவர் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி உள்ளன. படம் வெளியீடு காண தயாராக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தடை ஏற்பட்டுள்ளது. "விஷால் இதில் மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளார். அவரது வெற்றிப்பட வரிசையில் இந்தப் படமும் நிச்சயம் இடம்பெறும். எதிர்பாராத சில தடைகளால் பட வெளியீடு தாமதமாகி உள்ளது. விரைவில் எல்லாம் சீராகும். அதன் பின்னர் படம் வெளியாகும்," என்கிறார் இயக்குநர் மித்ரன்.
தடைகள் விலகக் காத்திருக்கும் விஷாலின் 'இரும்புத்திரை'
1 mins read
-

