'சிம்ரன், திரிஷா போல் பிரகாசிக்க வேண்டும்'

'சிம்ரன், திரிஷா போல் பிரகாசிக்க வேண்டும்'

1 mins read
51f63673-4493-4d21-9772-58842dd43c50
-

விஜய் ஆண்டனியின் திறமையும் எளிமையும் தம்மை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாகச் சொல்கிறார் இளம் நாயகி அம்ரிதா. 'காளி' படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் நான்கு நாயகிகளில் இவரும் ஒருவர். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறாராம். அம்ரிதாவை தமிழில் அறிமுகப்படுத்திய படம் 'படைவீரன்'. சினிமாவுடன் அறவே தொடர்பில்லாத குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கிறார். இளங்கலை பட்டப்பிடிப்பை முடித்தவருக்கு எதிர்பாராத வகையில் சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது. கோடம்பாக்கத்தில் கால் பதிப்பதற்கு முன் சில குறும்படங்கள், விளம்பரப் படங்கள், இசைத் தொகுப்புகளில் நடித்துள்ளாராம்.

"விஜய் ஆண்டனி சாரின் இசையையும் அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். பல உயரங்களைத் தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். "படப்பிடிப்பின்போது நல்ல தோழராக மிகவும் நன்றாகப் பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. "அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்தது. என்னை இன்னும் மெருகேற்றிக் கொள்ள உதவியாக இருந்தது. "குறிப்பாக நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கும்போது பதற்றமாக இருந்தேன். "அப்போது தன்மையாகப் பேசி என்னை அமைதிப்படுத்தினார்," என்று பாராட்டு மழை பொழிகிறார் அம்ரிதா.