'திருப்தியாக உணர்கிறேன்'

1 mins read
8292333f-e902-4e7f-a1e0-3dfdb73aa21e
-

நடிப்பைவிட படிப்புதான் முக்கியம் என்கிறார் ‌ஷிவதா நாயர். படங்களில் நடித்தபடியே தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பரதநாட்டியம் தொடர்பாக முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறாராம். இப்போது தேர்வு நேரம் என்பதால் அம்மணி படப்பிடிப்பில் பங்கேற்பதில்லை. சினிமாவுக்குத் தற்காலிக விடுப்பு கொடுத்து விட்டு கடந்த இரு மாதங்களாக விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருக்கிறார். ‌ஷிவதாவுக்கு திருமணமாகிவிட்டது. இருந்தாலும் தனக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருவதாகச் சொல் கிறார்.

"பாபி சிம்ஹா ஜோடியாக நடித்த 'வல்ல வனுக்கு வல்லவன்' படம் மே மாதம் வெளி யாக இருக்கிறது. 'முரண்' ராஜன் மாதவ் இயக்கத்தில் நந்தன், நிவாஸ் ஆதித்தனுடன் 'கட்டம்' படத்தில் நடித்திருக்கிறேன். இதுவும் வெளியீடு காணத் தயாராக உள்ளது. "அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக 'இறவாக்காலம்' படத்தில் நடித்திருக்கிறேன். இன்னொரு நாயகியாக வாமிகா நடித்திருக்கிறார்.

இவை தவிர, மலையாளத்தில் 'சாணக்ய தந்திரம்' என்ற படத்திலும் நடித்துள்ளேன்," என வரிசையாகப் பட்டியலிடுகிறார் ‌ஷிவதா. 'இறவாக்காலம்' படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மதுமிதாவாம். இது வரை ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், இந்த மதுமிதா கதாபாத்திரம் அனைத் தையுமே தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு மிக வித்தியாசமாக இருக்குமாம். "அந்தளவுக்கு மிக உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் இது. திகில் கதை என்றாலும், மனித உணர்வு களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். எனவே என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது.