விஜய் சேதுபதி ஜோடியாக 'காதலும் கடந்து போகும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மடோனா. அதைத் தொடர்ந்து 'கவண்' படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார். தற்போது 'ஜுங்கா' மூலம் மூன்றாவது முறையாக சேதுபதியுடன் இணைந்துள்ளார். கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் தாதாவாக வருகிறாராம் விஜய் சேதுபதி. இதில் இன்னொரு நாயகியாக 'வனமகன்' சாயிஷா நடித்துள்ளார். "கதைப்படி இரு நாயகிகள் இருந்தாலும் எனக்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தயக்கமின்றி நடிக்க ஒப்புக் கொண்டேன்," என்கிறார் மடோனா. இதேபோல் இரு நாயகிகள் உள்ள கதையில் நடிக்கிறார் அக்ஷரா ஹாசன். கமல் தயாரிப்பில், 'தூங்காவனம்' இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்க உள்ள இப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறாராம் அக்ஷரா. இது முழுநீள திகில் படம் எனத் தகவல்.
மூன்றாவது முறையாக சேரும் ஜோடி
1 mins read
-

