பிந்துவின் கிராமத்து வாழ்க்கை

1 mins read

விடுமுறையை உல்லாசமாக, வித்தியாசமாகக் கழிப்பது என்பது தனிக்கலை. அது எல்லோ ருக்கும் கைகூடிவிடாது. இந்தக் கலையில் தாம் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்துள்ளார் பிந்து மாதவி. திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக தற்போது இவர் ஓய்வாக உள்ளார். இதையடுத்து வெளிநாடுகளுக்குப் பறக்காமல் ஆந்திராவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்குச் சென்று முகாமிட்டுள்ளார். வழக்கமாக ஓய்வு கிடைத்தாலோ, ஏதேனும் ஒரு காரணத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டாலோ நடிகைகள் ஓய்வெடுக்க வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுவர்.

நடிகை திரிஷா இதையே வழக்கமாக வைத் துள்ளார். தனியாகச் செல்லாமல் தனது தோழிகளையும் அழைத்துச்சென்று விடுமுறையை உற்சாகமாகக் கழிப்பார் அவர். இந்நிலையில் பிந்து மாதவியோ இதற்கு நேர் மாறாக ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார். நகர்ப்புறத்தை மறந்து கிராமத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டார் பிந்து. கடந்த ஒரு மாதமாக தனது சொந்த கிராமத்தில் தங்கி இருப்பவர், மனம் நிறைந்த உற்சாகத்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். "ஹைதராபாத்தில் இருந்து ஏழு மணி நேரப் பயணத்தில் எங்கள் ஊரை அடையலாம். இந்தக் கிராமத்தில் தற்போது சுற்றி வருவது உற்சாகம் அளிக்கிறது.