அபிசரவணன் நாயகனாகவும், புதுமுகம் வினோலியா நாயகியாகவும் நடிக்கும் படம் 'வெற்றிமாறன்'. இப்படத்தை மனோ என்பவர் இயக்கி உள்ளார். "இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பாதிப்புக்குள்ளாகும் ஒரு காதல் ஜோடியின் கதையே இப்படம். இதில் வரும் திகில் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும். கதையின் நாயகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். எனவே அபிசரவணன் இதற்கு மிகப் பொருத்தமானவராக இருப்பார் எனப் படக்குழுவில் இருந்த அனைவருமே உறுதியாக நம்பினோம். அது வீண்போகவில்லை," என்கிறார் இயக்குநர் மனோ.
படக் குழுவினரின் நம்பிக்கையைக் காப்பாற்றிய 'வெற்றிமாறன்' பட நாயகன்
1 mins read
-

