மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக நடிக்கிறார் ஜோதிகா. இந்தக் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது 'செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். அதில் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும் சிம்பு பொறியியலாளராகவும் விஜய் சேதுபதி காவல்துறை ஆய்வாளராகவும் நடிக்க, வில்லன் வேடத்தில் நடிக்கிறார் அருண் விஜய். இந்நிலையில் ஜோதிகாவும் இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவருக்கு ஆணாதிக்கத்தை எதிர்க்கும் தைரியசாலி பெண் கதாபாத்திரமாம். நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற இந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நிச்சயம் மிளிர்வார் எனப் படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜோதிகாவுக்கு ஏற்ற கதாபாத்திரம்
1 mins read
-

