தமன்னாவுடன் மீண்டும் பிரபுதேவா

தமன்னாவுடன் மீண்டும் பிரபுதேவா

1 mins read
746b6c08-3bfb-4774-9540-01150d1fcfc9
-

'ஐபிஎல்' போட்டிகள் இந்தியாவில் இன்று முதல் ஆரம்பமாக உள்ளன. இந்தப் போட்டிகளைப் பொதுவாக போட்டி என்று சொல்லாமல் திருவிழா என்றுதான் சொல்வார்கள். இந்தப் பிரம்மாண்டமான விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் ஹிரித்திக் ரோஷன், வருண் தவான் ஆகியோரும் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோரும் கலந்துகொண்டு நடனம் ஆடுகிறார்கள். இவர்களோடு நடிகை தமன்னாவும் நடனமாட இருக்கிறார். அதற்காக பெரும் தொகையை சம்பளமாகப் பெற்றிருக்கிறார். தமன்னா ஆடுவதை அறிந்த நடன இயக்குநர் பிரபு தேவாவும் தமன்னாவுடன் இணைந்து நடனமாட ஒத்துக்கொண்டு இருக்கிறார்.

இயக்குநர் விஜய்யின் 'தேவி' படத்தில் பிரபுதேவா, தமன்னா இணைந்து நடித்தனர். அந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் பிரபுதேவா = தமன்னாவுக்கு இடையே நட்பும் மலர்ந்தது. அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளில் தமன்னாவைப் புகழ்ந்து தள்ளினார் பிரபுதேவா. இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் 'கொலையுதிர் காலம்' படத்தைப் படக்குழுவினர் இந்தியில் மறுபதிப்பு செய்ய திட்டமிட்டனர். இந்தியில் பிரபு தேவா நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவருடன் நடிக்க நயன்தாராவிடம் கேட்டபோது மறுத்துவிட்டார். அதனையடுத்து தமன்னாவைக் கதாநாயகியாக நடிக்க கேட்டனர். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார்.