தரக்குறைவான விமர்சனத்திற்கு சுஜாவின் சாட்டை பதிலடி

2 mins read
8a96aa8f-9ee6-4498-af09-7ab39168f577
-

தனது புகைப்படத்தைத் தரக் குறைவாக விமர்சனம் செய்தவர் களுக்குச் சரியான பதிலடி கொடுத்துள்ளார் பிக்பாஸ் புகழ் சுஜா வருணி. நடிகர்கள், நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் தங்களு டைய புகைப்படங்கள் மற்றும் படம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்களைப் பதிவு செய்யும் போது அதற்கு சிலர் தரக் குறை வான விமர்சனங்களைப் பதிவு செய்வதும் உண்டு.

இதற்கு சில நடிகைகள் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் சுஜா வருணி, தன்னுடைய புகைப் படத்தைத் தரக்குறைவாக விமர் சனம் செய்த ரசிகர்களை வெளுத்து வாங்கி இருக்கிறார். "எல்லா பெண்களும் நல்லவர் கள் இல்லை. எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை என்று பதிவு செய்து, தன்னுடைய புகைப் படத்திற்கு தரக்குறைவாக விமர்சனம் பதிவு செய்தவர்களை 'ஸ்கீரின் ஷாட்டுடன்' பதிவு செய்து அவர்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும், "இதுபோன்றவர் களுக்கு அஞ்சக் கூடாது. அவர் களைத் தைரியமாக வெளிக்காட் டுங்கள். நான் ஒரு நடிகை. சினிமாவிலும் பொது நிகழ்ச்சி களிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். "இந்த ஆடைதான் உங் களுக்குப் பிரச்னையா? அப்படி என்றால் சிறு குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளா வாது ஏன்? நாங்கள் பிரச்சினை இல்லை. உங்களது காமவெறி தான் பிரச்சினை. "இணையம் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக் கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர் கள். நீங்கள் கண்காணிக்கப் பட்டுத் தண்டிக்கப்படுவீர்கள்," என எச்சரித்துள்ளார்.