'சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகிய நிலையில், தற்போது அக் கதாபாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில், இப்படத்தில் சங்கமித்ராவாக நடிக்க கடந்த ஆண்டு ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹாசன் அதற்காக வாள் பயிற்சியும் பெற்றார். ஆனால் திடீ ரென்று அப்படத்திலிருந்து விலகினார். ஸ்ருதிஹாசன் விலகிய நிலையில் 'சங்கமித்ரா' படத்தில் தற்போது திஷா பதானி நடிக்கிறார். இவர் இந்தியில் டோனியின் வாழ்க்கை படமான, 'எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் நடித்தவர்.
8ஆம் நூற்றாண்டில் உள்ள அழகியான 'சங்கமித்ரா' தனது ராஜ்ஜியத்தை காப் பாற்றுவதற்காக எதிர்கொள்ளும் துயரங் களும் சோதனைகளுமே இப்படத்தின் மையக்கருவாம். பல்வேறு ராஜ்ஜியங்கள் மற்றும் உறவுகளைப் பற்றிய இந்தக் கதை படம் பார்க்கும் ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் விதத்தில் சொல்லப்படவுள்ளதாம். ஏற்கெனவே ஆர்யா, ஜெயம் ரவி 'சங்கமித்ரா' படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.
இதனை தேனாண்டாள் ஸ்டு டியோ லிமிடெட் நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் தயா ரிக்கவுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உரு வாகவுள்ள இப்படத் திற்கு ரஹ்மான் இசை அமைக்கி றார். படப்பிடிப்பிற்கு முந்திய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூலை மாதம் ப ட ப் பி டி ப் பை த் துவங்கத் திட்ட மிடப்பட்டு உள்ள தாக படக்குழு தெரி வித்துள்ளது.

