ஒரு படத்தில் தங்கையாக நடித்துவிட்ட காரணத்தால் எப்போதுமே அதேபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா என்று கேட்கிறார் ஜெனிஃபர். 'கில்லி' படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர், தற்போது தமிழ்ச் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் தங்கை வேடத்திலேயே தொடர்ந்து நடிக்கலாமே என்று கேட்கிறார்களாம்.
முதலில் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டவர், இப்போது பதிலுக்கு தானும் கேள்வி கேட்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். 'கில்லி' படத்தில் விஜய்யுடன் ஜெனிஃபர் செய்த கலாட்டா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். படங்களிலும் சிறிய பாத்திரங்களில் அவ்வப்போது தலைகாட்டினார். இந்நிலையில் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளாராம். அதற்கான வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. "சிறுமியாக இருக்கும்போதே நடிப்பில் அசத்தினார். விரைவில் நாயகியாகவும் அசத்துவார்," என்கிறார்கள் ஜெனிஃபருக்கு நெருக்கமானவர்கள்.

