ஏஆர்கே இயக்கத்தில் சீனு, சுவிதா நடிப்பில் உருவாகி வரும் படம் 'தேவகோட்டை காதல்'. ஹப்பாஸ் மூவிலைன் நிறுவனம் தயாரிக்கிறது. கஞ்சா கருப்பு, பாவா லட்சுமணன், தீப்பெட்டி கணேசன், அனு உள்பட பலர் நடிக்கிறார்கள். சீனு கதை எழுதுகிறார். "படித்த பணக்கார அழகான பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழைப் பையனுக்கும் இடையே காதல் மலர்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சினை களும் கலவரங்களும்தான் கதையின் முடிச்சு. மதுரை, ஆலப்புழை, பாலக்காடு மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது," என்கிறார் ஏஆர்கே.
'தேவகோட்டை காதல்'
1 mins read
-