இந்தி, தமிழ்த் திரையுலகங்களுக்கு மத்தியில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகச் சொல்கிறார் இளம் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். அண்மைய பேட்டி ஒன்றில், பாலிவுட் கலைஞர்களுக்கு அதிக திறமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. "தமிழில் நடித்து விட்டு இந்தியில் நடிப்பது குறித்து பலரும் கேட்கிறார்கள். இந்தித் திரையுலகில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கத்துடன் உள்ளனர். அவர்களிடம் அதிக திறமையும் உள்ளது.
"எனது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தார். இதனால் வட மாநிலத்தில் அதிகம் வசித்ததால் நன்றாக இந்தி பேசுவேன். இதனால் எனக்கு மொழிப் பிரச்சினை இல்லை," என்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். எனினும் தமிழ்த் திரையுலகத்தினரை குறைத்து மதிப்பிட்டு அவர் கருத்து தெரிவித்திருப்பது கோடம்பாக்கத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மிலின் டாக்கீஸ் இந்திப் படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் நடித்து வருகிறார் ஷ்ரத்தா.

