விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் நடிப்பில் வெளியான முந்தையப் படமே காரணமாகிவிட்டது. விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தை அலெக்சாண்டர் என்பவர் தமிழகத்தில் வெளியிட்டார். அதிக விலை கொடுத்து வாங்கிய அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியீடு கண்ட முதல் மூன்று நாட்களில் ஓரளவு வசூலைப் பெற்ற இப்படம், ஒரே வாரத்தில் பெட்டிக்குள் அடங்கிவிட்டது. பல திரையரங்கு களில் ஒரு வாரம் கூட படம் ஓடவில்லை.
இதனால் அலெக்சாண்டருக்கு நான்கு கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யுமாறு கோரி விஜய் ஆண்டனியை அணுகி உள்ளார் அலெக்சாண்டர். அப்போது பணம் கொடுக்க மறுத்த ஆண்டனி தரப்பு, அவரது அடுத்த படமான காளியின் வெளியீட்டு உரிமையை குறைந்த விலைக்குத் தருவதாகவும், இதன் மூலம் நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியதாக அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். "இதற்காக 50 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி ஒப்பந்தம் செய்து கொண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவ தால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகிப்பாளர்கள் புதிய படங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் 'காளி'க்கு கொடுக்க வேண்டிய மீதித் தொகையை என்னால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை.
"ஒப்பந்தப்படி தொகை செலுத்தத் தவறிய தால் 'காளி' பட ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி கடிதம் அனுப்பி உள்ளார். என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள். "எனவே 'அண்ணாதுரை' மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி விட்டு 'காளி'யை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்," எனக் கூறி நீதிமன்றத்தை அணுகி உள்ளார் அலெக்சாண்டர். இதையடுத்து ரூ.4.73 கோடியை விஜய் ஆண்டனி நீதிமன்றத் தில் செலுத்திய பிறகே 'காளி'யை வெளியிட வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது. இல்லை எனில் படத்திற் கான தடை தொடரும் என உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

