தமிழ்த் திரையுலகத்தினர் அண்மையில் நடத்திய மவுனப் போராட்டத்தில் முன்னணி நடிகைகள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து திரையுலகச் சங்கங்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மவுனப் போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இதில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நடிகர் அஜீத் மட்டும் வழக்கம் போல் இந்நிகழ்விலும் பங்கேற்க வில்லை. இதனால் முன்னணி நடிகர்களும் கூட அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் இளம் நாயகிகள் பலர் திரையுலகப் போராட்டத்தைப் புறக்கணித்தது திரையுலகத்தினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், அமலா பால், திரிஷா உள்ளிட்ட பலர் போராட்ட களம் பக்கம் தலைகாட்டவே இல்லை. இத்தனைக்கும் போராட்டம் நடந்த போது இக்குறிப்பிட்ட நடிகைகளில் பலர் சென்னையில் தான் இருந்தன ராம். மேலும் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு இல்லாத நிலையில், நடிகைகள் வீட்டில் ஓய்வில் தான் உள்ளனர். அப்படி இருந்தும் போராட் டத்தில் பங்கேற்காதது ரசிகர்கள் மத் தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

