'தெறி' மறு பதிப்பில் கேத்தரின்

'தெறி' மறு பதிப்பில் கேத்தரின்

1 mins read
35f1a415-b2cd-4ff5-9f05-4c7fd7893717
-

'மெட்ராஸ்', 'கணிதன்' படத்தில் நடித்து கோடம்பாக்கத்தில் தனக் கென ஒரு இடத்தைப் பிடித்தி ருக்கிறார் கேத்ரின் தெரசா. அவர் தற்போது தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து வெற்றி பெற்ற 'தெறி' ரசிகர் கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இப்படம் தெலுங்கு மொழியில் மறு பதிப்பாக இருக்கிறது.

கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கிறார். 'தெறி'யில் ஏமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகி இருப் பதாகக் கூறப்படுகிறது. மற்ற இரு நாயகிகளுக்கான தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கி றது. இப்படம் குறித்த அதிகார பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 'தெறி' மறு பதிப்பில் நடிப்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்கிறார் கேத்தரின் தெரசா.