சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் எனும் கனவுடன் தான் வளர்ந்தி ருக்கிறார் 'கயல்' சந் திரன். நடிப்பின் மீதான ஆர் வம் காரணமாக படிப்பில் நாட்டம் இல்லாமல் போய் விட்டதாம். 'கயல்' படம் மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுக மானவர், அடுத்து 'பார்ட்டி', 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்', 'டாவு' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் இருப்பவர், அண்மைய பேட்டியில் பல விஷயங்களை மனம்விட்டுப் பேசி இருக்கிறார். இனி சந்திரன் பேசுவதைக் காது கொடுத்துக் கேட் போம். "என் முதல் சினிமா வாய்ப்பு என்றால் அது 'ஆதலால் காதல் செய்வீர்' படம்தான். அதில் சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். "தன் காதலியின் கருக்கலைப்புக்காக நாயகன் தன் நண்பர்களிடம் பணம் கேட்பார். நிறையப் பேர் இல்லை என்று சொல்வார்கள். அதில் நானும் ஒருவன்.
"நிறைய காட்சிகளைப் படமாக்கினார்கள். ஆனால் திரையில் எதையும் காட்டாமல் சுருக்கமாக முடித்து விட்டனர். ஒருவேளை அது தான் அந்தப் படத்தின் வெற்றிக்கான காரணம் என்று கூட சொல்லலாம். அந்த ஒரு சின்ன வேடத்துக்காக மூன்று மாதம் அலுவலகத்துக்குப் போகாமல் விடுப்பு எடுத்தேன்."
பிறகு எப்படி நாயகனாக நடித்தீர்கள்?
"குறும்படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு நண்பர் மூலம் பிரபு சாலமன் தொடர்பு கிடைத்தது. 'கும்கி'யில் நடிக்க வாய்ப்பு கேட்டு என் புகைப்படங்களை அனுப்பினேன். "எந்தப் பதிலும் வரவில்லை. அவரது அடுத்த படத்திலும் வாய்ப்பு கேட்ட போது நேரில் வரச் சொன் னார். ஏகப்பட்ட திறனாய்வுகளுக்குப் பின் எனக்கு வாய்ப்பு கிடைப்பது உறுதியானது. "ஏதாவது சின்ன வேடமாக இருந்தாலும் பரவாயில்லை சார் என்றேன். பிரபு சாலமன் சாரோ, 'அட... நீதான்பா கதாநாயகன்' என்று சொல்லி என்னை அதிர்ச்சி அடைய வைத்தார்."
தற்போது நடித்து வரும் படங்கள் குறித்து?
"வெங்கட் பிரபு சார் இயக்கத்தில் 'பார்ட்டி'யில் நடித்து வருகிறேன். 'சரோஜா', 'கோவா', 'பிரியாணி' ஆகிய அவரது படங்களில் இருந்து இது மாறுபட்டக் கதை. முழுக்க முழுக்க பிஜி தீவில் படமாக்கி உள்ளனர். "முதல் முறையாக நிறைய நட்சத்திரங்கள் நடிக் கும் படத்தில் நானும் இருக்கிறேன். எல்லோரையும் எப்படி அனுசரித்துப் போக வேண்டும் என்பது தொடங்கி, நிறைய விஷயங்களை இந்தப் படம் பாடமாக கற்றுக் கொடுத்தது. "சிவா, ஷாம், நிவேதா பெத்துராஜ், ரம்யா கிருஷ் ணன், நாசர், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என்று பல ரும் இருப்பதால் படப்பிடிப்பு கலகலப்பாக இருந்தது.
'திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்' குறித்து?
"பார்த்திபன் சார் எப்படி குண்டக்க மண்டக்க பேசுவாரோ, அப்படித்தான் இந்தப் படத்திலும் பேசி யிருக்கிறார். படப்பிடிப்பின் போது ஏற்கெனவே குறிப் பிடாத வசனங்களையும் கச்சிதமாக, பொருத்தமாகப் பேசி அசத்துவார். அதற்கு ஏற்ப நாமும் பதில் பேசுவது அவ்வளவு சுலபம் அல்ல. இந்தப் படம் முழுக்க சிரிப்புக்குப் பஞ்சமே இருக்காது. அடுத்து ராம்பாலா சாருடன் 'டாவு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"மேலும் மகாவிஷ்ணு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். இது ஆண்களுக்குச் சவால் விடும்படி யான படம். அதனால் பெண்களுக்கு நிறையவே பிடிக்கும்." தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் சந்திரன். தனது அண்ணனுடன் சேர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளாராம். "தயாரிப்பாளராக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் படத்திலேயே பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். அதற்குப் பதில் நடிகனாகவே இருந்துவிட்டுப் போகலாம்," என்கிறார் சந்திரன்.

