பொதுவாக நடிகைகள் காதல், திருமணம் குறித்து வெளிப்படையாக ஏதும் பேசுவதில்லை. இது குறித்த கேள்விகளை நாசூக்காகத் தவிர்த்துவிடுவர். இந்நிலையில் கதாநாயகனாக நடித்த ஒருவர் தம்மிடம் இருமுறை தன் காதலைச் சொல்ல முயற்சி செய்ததாகக் கூறியிருக்கிறார் காஜல் அகர்வால். அந்த நடிகரின் பெயரையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அண்மைய பேட்டி ஒன்றில், தன்னுடன் இணைந்து நடித்த கதாநாயகர்கள் குறித்து திருவாய் மலர்ந்துள்ளார் காஜல். அந்த நடிகர்களின் குணாதிசயங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மகேஷ் பாபு மிகவும் அமைதியானவர். ஆனால் அவர் ஏதேனும் ஜோக் சொன்னால் வயிறு புண்ணாகிவிடும் அளவுக்கு சிரித்து விடுவோம். அல்லு அர்ஜுன் உடை அணிவதில் புதிய முறையைக் கடை பிடிப்பார். அவரும் பழகுவதற்கு இனிமை யான வர்.
"என்னைப் பொறுத்தவரை இளம் நாயகர்கள் பலருடன் நடித்திருந்தாலும் அவர்களது நடை, உடை, பாவனைகளை அருகில் இருந்து கவனித்துள்ளேன் என்றாலும், சிரஞ்சீவிதான் அனைவரையும் விட மிக வசீகரமானவர்," என்கிறார் காஜல். இதையடுத்து சக நடிகர்கள் யாரேனும் உங்களைக் காதலித்துள்ளனரா? எனும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தயக்கமின்றிப் பதிலளித்துள்ளார்.
"பலருக்கு என் மீது காதல் இருந்திருக்கலாம். ஆனால் நடிகர் நவ்தீப் மட்டுமே இரண்டு முறை என்னிடம் தன் காதலைச் சொல்ல முயற்சி செய்தார்," என்று காஜல் கூறியுள்ளார்.

