உற்சாகத்தில் மிதக்கும் பிரியா

1 mins read
bad49220-0a17-40b2-b4bf-86408dbd795f
-

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குத் தாவிய பின்னர் பிரியா பவானிசங்கரின் காட்டில் அடைமழைதான். 'மேயாத மான்' படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமானவர், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில், அவரது முறைப்பெண்ணாக நடிக்கிறார். அடுத்து அட்லியின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடி இவர்தான். இந்நிலையில் 'ஒருநாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக பிரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வருவதால் உற்சாகத்தில் திளைக்கிறாராம் அம்மணி. அதேசமயம் கதைகளைத் தேர்வு செய்வதில் அனுபவ நடிகையைப் போல் கச்சிதமாக செயல்படுவதாக கோடம்பாக்க விவரப்புள்ளிகள் பாராட்டுகின்றனர்.