விஜய் ஆண்டனி நாயகனாக நடித் துள்ள 'காளி' படத்துக்கு நீதிமன் றம் விதித்த தடை நீங்கியுள்ளது. விஜய் ஆண்டனி 'அண்ணாதுரை' படத்தை வெளியிட்ட தால் தமக்கு ஏற்பட்ட ரூ.4.73 கோடியை ஈடுகட்டும் வரை 'காளி' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என 'பிக்சர் பாக்ஸ்' அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடுத்தார். இதைய டுத்து 'காளி'க்கு தடை விதிக்கப்பட் டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தை அணுகினார் விஜய் ஆண்டனி. அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், 'பிக்சர் பாக்சு'க்கு ரூ.2 கோடியை விஜய் ஆண்டனி நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் வைப்புத் தொகையாக செலுத்திய பின் படத்தைத் திரையிடலாம் என உத்தரவிட்டுள்ளனர்.
'காளி' பட வெளியீடு: தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்
1 mins read
-

