கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான 65வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான குழு விருதுகளைத் தேர்வு செய்தது. விருதுகளை அறிவிக்கும்போது, 'வட்டார மொழி திரைப்படங்கள் தரத்தில் வியக்க வைக்கின்றன' என்று சேகர் கபூர் தெரிவித்தார். அறிவிக்கப்பட்ட விருதுகள் மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி 2' படத்திற்கு 'சிறந்த வெகுஜனப்படம்', 'சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநர்' (பீட்டர் ஹெய்ன்), 'சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்' என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ரோகிணி, நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தப் படம், தற்போது கூட 100 நாட்களைக் கடந்து ஜப்பானில் திரையிடப்பட்டு வருகிறது.
'டூலெட்' தமிழ்ப் படத்திற்கு தேசிய விருது
1 mins read
-

