தாய்மை அடைவதைத் தள்ளி வைக்கும் சமந்தா

தாய்மை அடைவதைத் தள்ளி வைக்கும் சமந்தா

1 mins read
6473e250-a001-4ca2-a621-baceea6d9f70
-

திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடித்து திரைக்கு வந்திருக்கும் 'ரங்கஸ்தலம்' தெலுங்கு படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது. அதனால் அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்குமாறு பல இயக்குநர்கள் அணுகி உள்ளனர். இதற்கிடையில் அவர் ஐந்து படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு இருக்கிறார். வரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். அதனால் தாய்மை அடைவதற்கான காலத்தைத் தள்ளிப்போட்டு இருக்கிறாராம்.

எத்தனை ஆண்டுகள் தள்ளி வைத்திருக்கிறார் என்பதைச் சொல்லாவிட்டாலும் குழந்தையைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வதற்குப் போதுமான நேரம் தேவை. படத்தில் நடித்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாது என்பதே அவரது இந்தக் கால நீட்டிப்புக்கு முக்கிய காரணமாம். குழந்தை பிறந்துவிட்டால் நடிப்பை நிறுத்திவிட்டு குழந்தையைக் கவனித்து வளர்க்கவேண்டும் என்பதே அவருடைய நீண்ட நாள் ஆசையாம்.