நடனம் குறித்து பிரபுதேவாவுடன் விரிவாகக் கலந்துரையாடியது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். 'யங் மங் சங்' படத்தில் இவரும் பிரபுதேவாவும் இணைந்து நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தமிழில் லட்சுமி நடிக்கும் படம் இது. இப்படத்தில் நடிப்பதற்கு பிரபுதேவாதான் முக்கிய காரணமாம்.
"படப்பிடிப்பின் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பிரபுதேவாவுடன் உரையாடலாம். ஒரு நடனக் கலைஞர் என்ற வகையில் நடனம் குறித்து அவரிடம் பேசி பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பதே இப்படத்தில் நடிக்க எனக்கு உந்துதலாக இருந்தது. பிரபுதேவாவுடன் நனம் குறித்து நாள் கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம்," என்கிறார் லட்சுமி மேனன். இனி தனக்கு பணம் முக்கியமல்ல என்றும், நல்ல கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரைச் சம்பாதிப்பதே முக்கியம் என்றும் லட்சுமி கூறுகிறார்.