சிவாதான் எனது முன்மாதிரி: பிரியா

சிவாதான் எனது முன்மாதிரி: பிரியா

1 mins read
02e130e5-42c8-4d09-8470-1a8adff639fe
-

திரையுலகில் சிவகார்த்திகேயன் தான் தனக்கு முன்மாதிரி என்கிறார் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சித் தொடர் மூலம் பலரையும் ஈர்த்த இவர், 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். இந்நிலையில் தனது வளர்ச்சிக்குக் காரணம் ரசிகர்கள்தான் என்று அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். திரைப்பட வாய்ப்புத் தடி வந்தபோது அதை ஏற்க முதலில் தயங்கினாராம். பிறகு சிவகார்த்திகேயன் பற்றி நினைத்தபோது தமக்குத் தைரியம் வந்தததாகச் சொல்கிறார்.

"தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோதே எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். திரைப்பட வாய்ப்பு வந்தபோது ஏற்கத் தயங்கினேன்."

"அப்போது சின்னத்திரையில் இருந்து °சனிமாவுக்கு வந்து பெரிய நடிகர் ஆன சிவகார்த்திகேயன் நினைவுக்கு வந்தார். அவரைப்போல் என்னாலும் சாதிக்க முடியும் என்ற தைரியம் வந்தது," என்றார் பிரியா.