நீண்ட வேலை நிறுத்தம் கார ணமாக தாம் சோர்வடைந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த்சாமி. மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். "போராட்டத்தை முன்வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முன்னேற்றம் கிடைத்துள் ளது என்பது எனக்குத் தெரியாது. அனைவருமே விரைவில் பணிக் குத் திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. "போராட்டத்தால் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள் ளனர். எனவே விரைவாக தீர் மானங்களைக் கொண்டுவர வேண்டும்," என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தற்போது 'நரகாசூரன்', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய இரு படங்களில் நடித்து முடித் துள்ளார் அரவிந்த்சாமி. அவற்றின் வெளியீட்டை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளாராம். மேலும், மணிரத்னம் இயக் கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படம் ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், திரையுலகில் நீடித்துவரும் வேலைநிறுத்தம் குறித்து தன் கவலையை வெளிப் படுத்தி உள்ளார் அவர். "ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் சோர் வடைந்து இருக்கிறேன்," என்று அரவிந்த்சாமி மேலும் கூறி உள்ளார். டிஜிட்டல் முறையில் படங் களைத் திரையிடுவதற்கான கட்ட ணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள்.
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

